பிஞ்சு குழந்தை சுத்தியால் அடித்து கொலை..நீதிமன்றத்தில் தந்தை அளித்த வாக்குமூலம்

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தனது ஒரு வயது குழந்தையை சுத்தியால் அடித்து கொன்று மற்றொரு குழந்தையை கொல்ல முயன்ற குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மார்ச் மாதம் லண்டன், பின்ஸ்ஸ்பரி பார்க் அருகில் உள்ள குடியிருப்பில் Gabriel Bibekdas Sonu என்ற ஒரு வயது ஆண் குழந்தை கொல்லப்பட்ட நிலையில் மற்றொரு பெண் குழந்தை தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

advertisement

இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை 33 வயதான பித்யா சாகர் தாஸை கைது செய்த பொலிசார், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், Gabriel Bibekdas Sonuவை சுத்தியால் அடித்து படுகொலை செய்ததாகவும், மற்றொரு குழந்தையை அடித்து கொல்ல முயன்றதாக சாகர் தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றவாளி சாகர் பெங்காலி என்பதால் பெங்காலி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாகரின் வாதத்தை நீதிபதி கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து, சாகருக்கான தண்டனை அக்டோபர் 12ம் திகதி என அறிவிக்கப்படும் என குறிப்பிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்