பிரித்தானியாவில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் தாக்குதல்..இளைஞருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பிரித்தானியாவில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் இளைஞர் ஒருவரின் முகத்தில் அறியப்படாத திரவத்தை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிங்ஸ்டன் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் 20 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

advertisement

சம்பவத்தின் போது பட்டப்பகலில் கிங்ஸ்டன் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சாலையில் இளைஞர் காரில் உட்கார்ந்து கொண்டிருந்து போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இளைஞரின் முகத்தில் திரவத்தை ஊற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் உடனே அவரச உதவி மையத்தால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இளைஞருக்கு மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது கொள்ளை முயற்சி இல்லை என்பதை ஸ்காட்லாந்து யார்ட் உறுதிசெய்துள்ளது. திரவத்தை ஆய்வு செய்து பார்த்ததில் அது அரிக்கும் தன்மையற்றது என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்