விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணி மாயம்: பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் விமான நிலையத்தில் மாயமான சுற்றுலாப்பயணியின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்த பின்லாந்து நாட்டவரான Riina Elisabeth Sjogren என்பவரே மாயமானதாக பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 9-ஆம் திகதி எடின்பர்க் விமான நிலையத்தில் விமான டிக்கெட் வாங்கிய இவர் அதை பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி கைவிடப்பட்ட நிலையில் இவரது உடமைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

38 வயதான குறித்த நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் வள்ளையரான அவர் கண் கண்ணாடி அணிந்தவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்மணி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த பெண்மணி தமக்கு உதவி தேவை என எவரையேனும் அணுகினாலும் அவருக்கு உதவ வேண்டும் எனவும், அவர் பத்திரமாக உள்ளார் என்பதை தங்களுக்கு எண் 101-ல் தொடர்பு கோண்டு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்