பிரித்தானியர்களின் மூதாதையர்கள் கருப்பினத்தவர்களா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

நிறத்தை அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் இனவெறித் துவேஷங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், பிரித்தானியர்களின் மூதாதையர்கள் கருப்பாக இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பித்தானியாவில் 1903 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டின் மண்டைஓடு வழியாக அதன் உள் காதிலிருந்துஎடுக்கப்பட்ட DNAவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.

அந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியைக்கொடுத்துள்ளது.

பிரித்தானியர்களின் மூதாதையர்கள் 76 சதவிகிதம் கருப்பு நிறமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் அது.

பிரித்தானியத் தீவுகளில் குடியேறிய பிறகே அவர்கள் வெள்ளை நிறத்தைப்பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரித்தானிய முன்னோர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்விக்கான பதிலைப் பெற விஞ்ஞானிகள் 100 ஆண்டுகள் போராடிய நிலையில் தற்போது அந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது.

இந்த DNA பரிசோதனையின்படி பிரித்தானியர்களின் முன்னோர் கருப்புத் தோலும், கருப்பு நிற சுருள் முடியும், நீலக்கண்களும் உடையவர்கள் என்பது நிச்சயம் பெரும்பாலான பிரித்தானியர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கமுடியும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்