ஐக்கிய அமீரகம் சென்று திரும்பிய லாஸ் வேகாஸ் கொலையாளி: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
Seylon Bank Promotion

அமெரிக்காவை உலுக்கிய லாஸ் வேகாஸ் கொலையாளி Stephen Paddock அக்கிய அமீரகம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே இரவில் 58 உயிர்களை பலி வாங்கிய லாஸ் வேகாஸ் கொலையாளியின் குறிக்கோள் என்னவென்பது இதுவரையில் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத நிலையில்,

குறித்த நபர் தொடர்பில் மேலும் சில தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதில் அவர் லாஸ்வேகாஸ் படுகொலைக்கு முன்னர் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக முக்கியமான சில நாடுகளுக்கு 11 முறை பயணம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

குறித்த நாடுகள் அனைத்தும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஜிஹாதி குழுக்களின் ஆதிக்கம் மிகுந்தவை என்பதும் தெரிய வந்துள்ளது.

லாஸ் வேகாஸ் படுகொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து பொறுப்பேற்று வரும் நிலையில், உறுதியான எந்த காரணங்களையும் அந்த அமைப்பால் இதுவரை வெளியிட முடியவில்லை.

இந்த ஒரு வார காலத்தில் விசரணை அதிகாரிகள் மொத்தம் 1,000 சாத்தியக் கூறுகளை அலசியுள்ளனர். மட்டுமின்றி கொலையாளியின் அரசியல், பொருளாதாரம், சமூக நடவடிக்கைகள் என அனைத்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொலையாளியின் ஹொட்டேல் அறையில் இருந்து மீட்கப்பட்ட குறிப்பேடு ஒன்றில் இருந்து அவர் மிகத் துல்லியமாக திட்டமிட்டு, முன்னர் பயிற்சியும் மேற்கொண்டு களமிறங்கியுள்ளதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

படுகொலைக்கு முன்னர் Stephen Paddock பாலியல் தொழிலாளர்களுடன் செலவிட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள குறித்த பெண்களை இந்த வழக்கு தொடர்பில் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்