நிச்சயதார்த்த மோதிரத்தை பாதுகாக்க இப்படி ஒரு ஏற்பாடா? அமெரிக்க நடிகையின் செயல்

Report Print Harishan in அமெரிக்கா
63Shares
63Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் பிரபல பாடகி பாரிஸ் ஹில்டன் தனது விலையுயர்ந்த நிச்சயதார்த்த மோதிரத்தை 24 மணி நேரமும் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் பாடகியுமான பாரிஸ் ஹில்டனும் நடிகர் கிறிஸ் ஜில்காவும் காதலித்து வந்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் கடந்த வாரம் இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர்.

வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட அந்த நிகழ்வில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோதிரத்தை தனது காதலியான ஹில்டனுக்கு அணிவித்தார், கிறிஸ் ஜில்கா.

அந்த விலை உயர்ந்த மோதிரத்தை 24 மணி நேரமும் கண்கானித்து பாதுகாத்திடும் வகையில் சிறப்பு பாதுகாப்பு காவலர்களை நியமனம் செய்துள்ளார் ஹில்டன்.

முன்னதாக ஹாலிவுட் நடிகைகள் நிக்கி மனோஜ், கிம் கர்டாஷியான் ஆகியோரிடம் சமீபத்தில் கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ள நிலையில் ஹில்டன் இவ்வாறு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்