கண்ணுக்கு அடியில் முளைத்த பல்!

Report Print Deepthi Deepthi in ஆசியா
கண்ணுக்கு அடியில் முளைத்த பல்!
461Shares

சீனாவில் குவாங்ஜெவ் பகுதியைச் சேர்ந்த சாவோ பாங் (28) என்ற பெண்ணிற்கு கடந்த ஒரு மாதமாக முகத்தில் பெரும் வலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அவரால் உணவு உண்ண முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக இவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

பரிசோதனை செய்து பார்த்ததில், இவரது வலது கண்ணின் அடி பகுதியில் பல் முளைப்பது தெரியவந்தது.

எனவே உடனடியாக பல்லை அகற்றாவிட்டால் கண்பார்வை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உடனடியாக Chongqing நகரில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments