உங்க நட்சத்திரம் என்ன? யோகம் தரும் கிழமை இதுதான்

Report Print Printha in ஜோதிடம்
555Shares
555Shares
lankasrimarket.com

ஜோதிட ரீதியாக உள்ள 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்று தான் அனைவருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அந்த நட்சத்திரம் அவரவர் பிறந்த தினத்தை பொருத்து அமையும்.

அந்த நட்சத்திரங்களில் தனிப்பட்ட ஒரு நபருக்கு உரியது என்றில்லாமல், பொதுவாக அனைவருக்குமே நன்மை மற்றும் தீமை அளிக்கும் நட்சத்திரங்கள் சில உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதேநாட்களில் மேற்கூறப்பட்ட நட்சத்திரத்தை உடையவர்கள் அவர்களின் நட்சத்திர நாளன்று வெளியூர் பிரயாணம் மேற்கொள்வதோ அல்லது கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை தொடங்கவோ கூடாது.

எந்த நட்சத்திரம் எப்போது யோகம் தரும்?

நட்சத்திரங்களின் அடிப்படையில் அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள் கணிக்கப்படுகிறது.

பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அனைத்து கிழமைகளிலும் நற்பலன்களைத் கொடுக்க கூடியவை.

ஆனால் அசுவினி புதன் கிழமையிலும், மிருகசீரிஷம் வியாழன் கிழமையிலும், பூசம் வெள்ளி கிழமையிலும், சித்திரை சனி கிழமையிலும், அனுஷம் ஞாயிறு கிழமையிலும்,

மூலம் புதன் கிழமையிலும், உத்திராடம் திங்கள் கிழமையிலும், திருவோணம் வெள்ளி கிழமையிலும் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் வந்தால் அவை அனைத்து யோகத்தை கொடுக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்