இன்று அதிர்ஷ்ட தேவதை இந்த ராசிக்காரர்களுக்கு தான் அருள் தர போகிறார்

Report Print Kabilan in ஜோதிடம்

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பது குறித்து காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கரார்களுக்கு ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணத்திற்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள், தொழில் சகாக்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவு பெருகும். வெளிநாட்டு தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு தொழில் முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு போட்டிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் புகழ் கிடைக்கும். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உறவினர்களின் மூலமாக சுப செய்திகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலம் லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வேளாண் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். தள்ளிப்போன திருமண முயற்சிகள் கைகூடும். வாகனச் சேர்க்கை உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த எல்லா பிரச்சனைகளும் நீங்கும். பொதுக்கூட்டங்களில் பேசுபவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் காணப்படும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers