காதலர் தினத்தில் இந்த ராசிக்காரர்களை தான் காதல் வைரஸ் எளிதில் தாக்குமாம்! யார் அந்த அதிர்ஷ்டசாலி

Report Print Kavitha in ஜோதிடம்

காதல் தினத்தை முன்னிட்டு காதல் வைரஸ் 12 ராசியில் எந்த ராசிக்காரர்களை எளிதில் தாக்கும். யாருக்கு காதல் கல்யாணத்தில் முடியும் என்று பார்க்கலாம்.

மேஷம்

நெருப்பு ராசியான மேஷத்தில் பிறந்த நீங்கள் முதல்நாளே பார்த்து அடுத்த நாளே ஐ லவ் யூ சொல்லி அடுத்த நாள் மணமுடித்து ஹனிமூன் போக ஆசைப்படுவீர்கள்.

உங்க வேகத்தைப் பார்த்து எதிராளி மிரண்டு போய்விடுவார். எல்லா விசயத்திலும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்து விட்டு வருத்தப்படுவீர்கள்.

உங்க ராசி அதிபதி செவ்வாய் என்பதால் காதலோடு காமமும் அதிகமாகவே இருக்கும். காதலில் அகங்காரம் தான் உங்களுக்கு எதிரி.

அதை சரி செய்து விட்டால் உங்க காதல் ஜெயிக்கும். நீங்கள் நெருப்பு ராசிக்காரர் என்பதால் நெருப்பு ராசியில் பிறந்த சிம்மம், தனுசு ராசிக்காரங்களுக்கு காதல் அதிகமாகவே வரும்.

ரிஷபம்

சுக்கிரனை ஆதிக்க நாயகனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் இதயம் முரளி மாதிரி. காதலிக்க அதிகம் மெனக்கெடுவீர்கள்.

இந்த ராசியை சேர்ந்த பலபேர் காதலைச் சொல்லி வெற்றி ஆன பின்னால் ரொம்ப நேர்மையாக காதலிப்பீர்கள்.

கையில காசில்லேன்னாலும் கடன் வாங்கியாவது காதலிக்கு செலவு செய்வீங்கள். கன்னி, மகர ராசிக்காரங்கள் உங்களை அதிகம் காதலிப்பார்கள்.

மிதுனம்

நீங்கள் பேசி பேசியே எதிராளியை மயக்குற ஆள். அழகான சிரிப்பால் அனைவரையும் மயக்குவீர்கள்.

நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் உஷாராக அணுகும் உஷார் ஆள் நீங்கள். பிரச்சனையை முன்கூட்டியே மோப்பம் பிடித்து உடனே தப்பித்தல் விடுவீர்கள். துலாம், கும்பம் ராசிக்காரர்கள் நெருக்கமாவார்கள்.

கடகம்

உங்களுக்கு கற்பனை சக்தி உங்ககிட்டே அதிகம் இருப்பதாலே கவிதை, கதை எழுதி காதல் நாயகனாக திகழ்வீர்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றாக பிரிச்சு பேசுறதிலேயே பாதிப்பேர் உங்ககிட்டே விழுந்திடுவார்கள்.

நீங்கள் அந்த அளவுக்கு பேச்சுத்திறமை கொண்டவர்கள் . கனவு உலகத்தில் சஞ்சரிக்கிறதுன்னா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

மனோ காரகன் சந்திரனை நாயகனாக கொண்ட நீங்க அம்மா பிள்ளை என்பதால் அவர்கள் சம்மதத்தோடுதான் திருமணம் செய்வீர்கள். விருச்சிகம், மீன ராசிக்காரங்கள் உங்கள் அதிகம் விரும்புவார்கள்.

சிம்மம்

நீங்கள் சொல்றதை கேட்கிற ஆளைத்தான் நீங்க ஓகே செய்வீர்கள்.

கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கும். காதலுக்காக ஓட மாட்டீர்கள். காதல் உங்களை தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.

கொள்கையா? காதலா என்று கேட்டால் உங்கள் சாய்ஸ் கொள்கைதான். உங்களுக்கு ஒத்துவரக்கூடிய ராசி மேஷம், தனுசு.

கன்னி

கவர்ச்சியான முகவெட்டும் , உடலமைப்பும்,கலகலப்பான பேச்சும் கொண்டவர். கேலியும் கிண்டலும் பேசி பேசியே அனைவரையும் உங்கள் பக்கம் நீங்கள் திருப்பி விடுவீர்கள்.

கவுரவத்தைப்பற்றி துளியும் கவலைப்படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். காதலித்தவரையே கரம் பிடிப்பீர்கள். ரிஷபம், மகரம் ராசிக்காரர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள்.

துலாம்

நீங்கள் காற்று ராசியில் பிறந்தவங்கள் காதல் உங்களுக்கு சுவாசம் மாதிரி. சுக்கிரன் உங்க ராசி அதிபதி என்பதால் காமம் அதிகமாகவே இருக்கும்.

உண்மையான காதலுக்கு நீங்கள் மதிப்புக் கொடுப்பீர்கள். எச்சரிக்கை என்பது உங்கள் ரத்தத்தில் இயல்பாய் கலந்த ஒன்று.

நீங்கள் காதலிக்கிறவங்கள் உங்களை புகழ்ந்து பேசவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்.

உங்களை வர்ணிப்பதை ரொம்பவே ரசிப்பீர்கள். நீங்கள் காதலிக்கிற ஆள் கார், பங்களாவோட இருக்கணும்னு எதிர்பார்ப்பீர்கள். கும்பம், மிதுன ராசிக்காரங்கள் உங்களை காதலிப்பார்கள்.

விருச்சிகம்

நீங்கள் நல்ல திறமைசாலி ராசிக்காரங்களான உங்களுக்கு செவ்வாய் அதிபதி என்பதால் அந்த எண்ணங்கள் அதிகமாகவே இருக்கும். காதலியிடம் அன்பான பேச்சை விட காதல், காம பேச்சுக்களே தூக்கலாக இருக்கும்.

கோபத்தையும் கொட்டுவீர்கள். தேள் மாதிரி பழிவாங்கிற குணம் உங்க ரத்தத்தில் கலந்த ஒன்று.

அகங்காரம், மதிப்பு கொடுக்காத மட்டமான பேச்சும் காதல் பிரிய காரணமாகிவிடும். கடகம் மற்றும் மீன ராசிக்காரங்க உங்களை காதலிப்பார்கள்.

தனுசு

நீங்கள் நெருப்பு ராசிக்காரங்கள் . காதலியிடம் நேர்மையாகவும், நாகரீகமாகவும் நடந்துக்குவீர்கள். உங்களுக்கென உயரிய நோக்கம் இருக்கும். அதை அடைய காதல் ஒரு தடையாக இருக்கக்கூடாதுன்னு நினைப்பீர்கள்.

கடவுளை அதிகம் நம்புவதால், காதல் கல்யாணத்தில் முடிய ஆண்டவனை வேண்டி செல்வீர்கள். நீங்கள் உடுத்தும் உடை ஆடம்பரமாக இல்லைன்னாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்.

எப்பொழுதும் உங்கள் நெற்றியில் விபூதியோ, குங்குமமோ, சந்தனமோ இல்லாமல் வெளியே கிளம்பமாட்டீர்கள்.

காதல் தோல்வியடைந்தாலும் பெரிதாக வருத்தப்பட மாட்டீங்கள். மேஷம், சிம்ம ராசிக்காரர்கள் அதிகமாக உங்களை நேசிப்பார்கள்.

மகரம்

நீங்கள் காதலுக்காகவே பிறந்தவர்கள். காசு இல்லாம கூட இருந்துருவீங்க காதல் இல்லாம இருக்க மாட்டீர்கள்.

எதையும் மனசுவிட்டு பேச மாட்டீங்க. காதலை கமுக்கமாக வச்சிருப்பீங்கள். உங்களை உங்க காதலியோ காதலனோ ரொம்ப நேசிப்பார்கள்.

உங்க கவுரவத்துக்கும் எந்த பங்கமும் வந்துவிடக் கூடாதுன்னு நினைப்பீர்கள். காதலிக்கு செலவு செய்வதில் கூட கஞ்சத்தனம் காட்டுவீர்கள். ரிஷபம், கன்னி ராசிக்காரங்க உங்களைத் தேடி தேடி காதலிப்பார்கள்.

கும்பம்

காதல் உங்களுக்கு பிடித்தமான விசயம். கொஞ்சம் சோம்பேறித்தனம் இருப்பதாலே காதலியை சந்திக்க சரியா நேரம் ஒதுக்க மாட்டீர்கள்.

ஏமாற்றத்தை உங்களாலே தாங்கிக்க முடியாது. காதலில் தோல்வி வந்துட்டா அதை தாங்கிக்க முடியாது. சிலர் சோக கீதம் பாடுவீர்கள்

சிலர் வாழ்க்கையை முடிச்சிக்க நினைப்பீர்கள். மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரங்க உங்களை மனசார நேசிப்பார்கள்.

மீனம்

காதல், காதலி, காதலனிடம் உண்மையாக நடந்துக்க மாட்டீங்கள். கழுவுற மீன்ல நழுவுற மீனா இருப்பீர்கள்.

காதலிக்கின்ற பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டால் நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்னு கணக்கு செய்வீர்கள்.

உங்களுக்கு தெய்வ பக்தி அதிகம் இருக்கும். மாடர்ன் உடை பெண்களை விட மங்களகரமாக இருக்கிற பெண்களைத் தான் நீங்கள் அதிகம் விரும்புவீர்கள்.

கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரங்க தான் அதிகம் உங்களை நேசிப்பார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்