பாலியல் பொம்மையை திருடிச் சென்ற நபர்: தேடுதல் வேட்டையில் பொலிஸ்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பூட்டியிருந்த கடையில் இருந்து ஆளுயர பாலியல் பொம்மையை திருடிச் சென்ற நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான செக்ஸிலாண்ட் என்ற கடையிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

டோரத்தி எனப்படும் அந்த ஆளுயர பாலியல் பொம்மையை திருடிய நபர் குறித்த கண்காணிப்பு கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிசார், களவு போன டோரத்தி பாலியல் பொம்மையானது 2,500 பவுண்ட்ஸ் மதிப்பிலானது எனவும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை நிற வாகனத்தில் வந்த குறித்த நபர் கறுப்பு வண்ண உடை அணிந்திருந்ததாகவும் தலையில் குல்லா ஒன்று அணிந்திருந்ததாகவும் முகமூடியுடன் கடைக்குள் நுழைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கருவிகள் அனைத்தையும் நொறுக்கிவிட்டு 5 அடி 5 அங்குலம் அளவிலான டோரத்தி பாலியல் பொம்மையை திருடிக் கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்