சிட்னியில் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியானது: சமீபத்தில்தான் இலங்கை சென்று வந்தாராம்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

நேற்று சிட்னியில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திய இளைஞர் ஒருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்த செய்தி வெளியான நிலையில், அந்த நபர் மற்றொரு பெண்ணை கொலை செய்து விட்டு வந்தே தெருக்களில் அராஜகத்தில் ஈடுபட்டதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று சிட்னி தெருக்களில், கையில் இரத்தம் சொட்டும் கத்தியுடன் சத்தமிட்டுக் கொண்டு குழப்பம் விளைவித்த ஒரு இளைஞரை, பொதுமக்கள் சிலர் துணிந்து பிடித்தனர்.

பொலிசார் வந்து அவரை கைது செய்து விசாரிக்கும்போது, திடுக்கிடவைக்கும் சில தகவல்கள் கிடைத்தன.

அவரால் குத்தப்பட்ட பெண்ணின் பெயர் Linda Bo (41). கத்தியால் குத்திய இளைஞரின் பெயர் Mert Ney (21).

Mert, Lindaவைக் கத்தியால் குத்துவதற்குமுன், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் Michaela Dunn (24) என்னும் ஒரு அழகான இளம்பெண் ஒருவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு வந்திருக்கிறார்.

சுற்றுலா செல்வதில் விருப்பம் உள்ள Michaela, சமீபத்தில்தான் இலங்கை சென்று திரும்பினாராம்.

விசாரணையில் Michaela ஒரு பாலியல் தொழிலாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள CCTV கமெரா காட்சிகளில் Mert, Michaela வீட்டுக்கு சென்று திரும்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Michaelaவை Mert ஏன் கொலை செய்தார் என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்