அம்மை தழும்புகள் நீண்ட நாளாக இருக்கா? இதனை தடவுங்கள்

Report Print Printha in அழகு
192Shares
192Shares
ibctamil.com

முகத்தின் அழகை கெடுப்பதில் முதலில் பருக்களும் அதற்கு அடுத்தப்படியாக அம்மை தழும்புகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

இந்த பருக்களை கூட போக்கிவிடலாம், ஆனால் அம்மை தழும்புகள் மட்டும் நீண்ட நாட்களாக மறையாமல் அப்படியே இருக்கும். அதற்கான டிப்ஸ் இதோ,

அம்மை தழும்பை போக்க செய்ய வேண்டியவை?
  • தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.
  • கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் மை பதத்தில் அரைத்து அம்மை தழும்பு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
  • ஒரு எலுமிச்சைப் பழத்தை குறுக்காக வெட்டி அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் அழுத்தமாகத் தொடர்ந்து தேய்த்து வந்தால் தழும்புகள் விரைவில் மறையும்.
  • ஒட்ஸை மிதமான சூடுள்ள நீரில் கலந்து சூடு ஆறியதும் அந்த பேஸ்ட்டை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் கழுவ வேண்டும்.
  • 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கப் தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து அதை தழும்புகள் உள்ள இடங்களில் தடவி 10 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • தேங்காய் தண்ணீரை தழும்புகள் உள்ள இடங்களில் தடவி வந்தால், அம்மை தழும்புகள் நீங்கி, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
  • தேன் மற்றும் ஒட்ஸ் ஆகிய இரண்டையும் கலந்து அம்மை தழும்புள்ள இடங்களில் அழுத்தமாக தேய்த்து 30 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • பப்பாளியுடன் கரும்பு சர்க்கரை மற்றும் பாலை நன்றாக கலந்து அதை முகத்தில் நன்றாக தடவி சிறிது நேரம் கழித்து மிதமான சோப்பு பயன்படுத்தி சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதை நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்து காய்ந்த பின் முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் 3 முறைகள் செய்யலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்