வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடரும்: கனடா பிரதமர் உறுதி

Report Print Kabilan in கனடா

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தம் தொடரும் என மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, அமெரிக்காவின் மூத்த வர்த்த அதிகாரி ஒருவர், வட அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான, பேச்சுவார்த்தைகளை தடை செய்யும் திட்டங்களை நிராகரித்தார்.

இதன் மூலமாக, வாஷிங்டன், 1.2 Trillion டொலருக்கான வர்த்தக உடன்படிக்கையில் இருந்து விலகிவிடும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கனடாவின் பிரதமர் Justin Trudeau கூறுகையில், ’NAFTA தொடர்பாக, அமெரிக்கா முன்மொழிந்தது மிகவும் சிக்கலான மற்றும் சவாலானது ஆகும். நாங்கள் பழைய ஒப்பந்தங்களை ஒருபோதும் கையில் எடுக்கப்போவதில்லை என்று, நான் பலமுறை கூறியுள்ளேன்.

எனவே, அமெரிக்கா NAFTA தொடர்பாக மோசமான ஒப்பந்தத்தை முன்மொழிந்தாலும், கனடா NAFTA-வின் வழியில் மட்டுமே செல்லும். NAFTA-வை நாம் தள்ளி வைக்க முடியாது. அதே சமயம் அதன் மீது நம்பிக்கை உள்ளதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வாஷிங்டன் ஒப்பந்தத்தில் இருந்து விலகினால், அது அமெரிக்கா மற்றும் கனடா என இரு நாடுகளையும் பாதிக்கும்.

வட அமெக்காவின் ஒருங்கிணைந்த வர்த்தக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் கனடாவும், மெக்ஸிகோவும் NAFTA-வுக்கான சீர்த்திருத்தத்திற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளை தீர்க்க முயல்கின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்