நான் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை: மறுக்கும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Balamanuvelan in கனடா
309Shares
309Shares
lankasrimarket.com

கனடா பிரதமருக்கு அளிக்கப்பட்ட இந்திய விருந்தின்போது தீவிரவாத தொடர்புடைய ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய கனடா நாடாளுமன்ற உறுப்பினர், தான் அந்த நபருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Jaspal Atwal என்னும் காலிஸ்தான் தீவிரவாதக்குழுவுடன் தொடர்புடைய ஒருவரை கனடா பிரதமரின் இந்திய விருந்துக்கு அழைத்தது கனடா MPயான Randeep S Sarai என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தான் Jaspal Atwalக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்றும் அவரை தனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லை என்றும் Randeep S Sarai கூறியுள்ளார்.

பல ஊடகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தான் Jaspal Atwalஐப் பார்த்துள்ளதாகவும், அவருடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்ரும் அவர் தெரிவித்தார்.

அழைப்பிதழ் தனது அலுவலகத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டது என்றும், தான் செய்த ஒரே தவறு யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது என்பதை சரியாக பார்க்காததுதான் என்றும் கூறிய அவர் தவறுகளிலிருந்து தான் கற்றுக் கொள்வதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

கனடா பிரதமரின் இந்திய வருகையின்போது அவருக்கு அளிக்கப்பட்ட விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட Jaspal Atwal, அமைச்சர் ஒருவரை கொல்ல முயன்றதற்காக தண்டிக்கப்பட்டவன் என்பதும் முன்பு காலிஸ்தான் என்னும் தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Credit: Reuters

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்