கனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல்! பொலிஸார் அதிரடி..

Report Print Vethu Vethu in கனடா
185Shares
185Shares
lankasrimarket.com

கனடாவின் டொரன்டோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

சிலி நாட்டை சேர்ந்த 14 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலினால் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிலி நாட்டைச் சேர்ந்த 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Halton மாகாண பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு எதிராக 45 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த சிலி நாட்டவர்களின் குடும்பத்தினரோ பிள்ளைகளோ கனடாவில் இல்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

டொரண்டோ பொலிஸ், York பிராந்திய பொலிஸ் மற்றும் கனடா எல்லை பொலிஸ் ஆகியோர் சேர்ந்து நடத்திய தீவிர விசாரணையால் இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை கும்பலில் இருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாய்களுடன் நடந்து வீடு ஒன்றிற்கு சென்றுள்ளனர். இந்த செயலால் சந்தேகமடைந்த பொலிஸார் அவர்களை ஆராய்ந்துள்ளனர்.

அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே முழுமையான கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் டொரொண்டோ பகுதியில் 400க்கும் அதிகமான வீடுகளில் இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அதற்கமைய 5 நாட்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 2.7 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளை திட்டத்துடன் கனடாவுக்குள் நுழைந்தார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல தமிழ் குடும்பங்களின் வீடுகள் உடைக்கப்பட்டு பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்