டொரண்டோ பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்

Report Print Raju Raju in கனடா
176Shares
176Shares
lankasrimarket.com

டொரண்டோவை சேர்ந்த காட்சி கலைகளில் சிறந்து விளங்கும் பெண்ணுக்கு $50,000 மதிப்புள்ள ஸ்காட்டியா பேங்க் போட்டோகிராபி விருது வழங்கப்பட்டுள்ளது.

மவுரியா தவி என்ற பெண் ஓவியம் வரைதல், சிற்பம் வடிவமைத்தல் போன்ற காட்சி கலைகளில் திறமையானவராக திகழ்ந்து வருகிறார்.

தவி இதுவரை யாரும் பார்த்திராத மற்றும் கவனம் பெற்ற விடயங்களை ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் தயார் செய்து கண்காட்சியில் வைத்துள்ளார்.

தவியின் படைப்புகள் சிறப்பானதாக இருந்த நிலையில் அவருக்கு $50,000 மதிப்புள்ள ஸ்காட்டியா பேங்க் போட்டோகிராபி விருது முதல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

தவியின் படைப்புகளில் பல நியூரோர்க்கின் நவீன கலை மற்றும் அருங்காட்சியகத்திலும், லண்டனில் உள்ள டேட் மாடர்ன் மற்றும் டொராண்டோவின் ஆர்ட் கேலரி ஆஃப் ஒன்ராறியோவிலும் வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியின் இறுதி சுற்றுக்கு முன்னேற்றிய கிரேக் ஸ்டாட்ஸ் மற்றும் ஸ்டீபன் வாக்டீல் ஆகிய இரண்டு காட்சி கலை கலைஞர்களுக்கு $10,000 பரிசு வழங்கப்படவுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்