மனைவியுடன் ஜாலியாக பொழுதை கழித்த கனடிய பிரதமர்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

quebec மாகாணத்தில் அமைந்துள்ள Gatineau பூங்காவுக்கு ஜஸ்டின் தனது மனைவி சோபி மற்றும் இளைய மகனுடன் வருகை தந்தார்.

அங்குள்ள அழகான ஏரியின் முன்னால் ஜஸ்டினும், சோபியும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதோடு இருவரும் சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தார்கள்.

மேலும் பூங்காவில் உள்ள ஏரியில் மூவரும் சேர்ந்து படகுசவாரி மேற்கொண்டனர்.

படகை ஜஸ்டினும், சோபியும் துடுப்பு மூலம் இயக்க இருவருக்கும் நடுவில் அவர்களின் குழந்தை உட்கார்ந்திருந்தது.

இது சம்மந்தமான புகைப்படங்களை சோபி தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய பரபரப்பான பொது வாழ்வின் மத்தியிலும் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துக்கு எப்போதும் நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers