அவள் என்னைக் காதலிக்கக்கூட விடவில்லை: பெற்ற தாயை அருவருப்பாக சாக விட்ட மகனின் வாக்குமூலம்

Report Print Balamanuvelan in கனடா
416Shares
416Shares
lankasrimarket.com

பெற்ற தாயை மலம் சிறுநீரின் நடுவே சாக விட்ட கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

அலட்சியம் காரணமாக dementiaவால் பாதிக்கப்பட்ட தனது தாயின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக Winnipegஐச் சேர்ந்த Ronald Siwicki என்னும் இசைக்கலைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு அவரது தாயான எலிசபெத் (89) படுக்கையிலிருந்து கீழே விழுந்தார். அவரால் எழுந்திருக்க முடியாததால் சுமார் மூன்று வாரங்களுக்கு அவர் அந்த இடத்திலேயே மூன்று வாரங்களுக்கும் மேலாக விடப்பட்டார்.

தனது தாய் மருத்துவமனைக்கு போக விரும்பவில்லை என்றும் தானே தனது தாயைக் கவனித்துக்கொண்டதாகவும் Siwicki தெரிவித்தார்.

படுக்கைப் புண் ஏற்பட்டு அது முற்றிப்போனதால், எலும்புகள் வரை நோய்த் தொற்று ஏற்பட்டதால் எலிசபெத் இறந்ததாக பிரேதப்பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் தனது வாழ்க்கை முழுவதையுமே பெற்றோருக்காகவே செலவிட்டதாகவும், நகரை விட்டு எங்குமே செல்ல தான் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவரது தாய் அவரை காதலிக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் Siwicki புகார் கூறியிருந்தார்.

Siwickiக்கு 35 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்