கனடா சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்

Report Print Balamanuvelan in கனடா
171Shares
171Shares
lankasrimarket.com

ஓராண்டிற்கு முன் கொலை செய்யப்பட்ட கனடா சிறுமி வழக்கில் முக்கிய திருப்பமாக கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதோடு பல முக்கிய தகவல்களும் கிடைத்துள்ளன.

Marrisa Shen (13) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி காணாமல் போனாள். மறு நாள் காலை பர்னபி செண்ட்ரல் பார்க்கில் அவளது உயிரற்ற உடல் கிடைத்தது.

அவள் எப்படிக் கொல்லப்பட்டாள் என்றோ, அவள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாளா இல்லையா என்றோ பொலிசார் தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 7அன்று சிரியாவிலிருந்து 17 மாதங்களுக்குமுன் அகதியாக வந்த இப்ராஹிம் அலி (28) என்பவன் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டான்.

இதற்கு முன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாத அவன் மீது தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு குற்றம் என்றே நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர், கொலைக்கான நோக்கத்தைப் பொருத்தவரையில் வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைக் குறித்த தகவல்களை வெளியிட இயலாது என்றார்.

Marrisa கொலை செய்யப்பட்டு ஓராண்டு முடிந்து விட்ட நிலையில் வழக்கில் ஏற்பட்டுள்ள இந்த முக்கிய திருப்பம் குறித்து அவளது குடும்பத்தார் பொலிசார், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்த குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் 600 பேர் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர், 1000 மணி நேர வீடியோ பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்