மாணவனை கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்: வீடியோ எடுத்தவர்களை எச்சரிக்கும் பொலிசார்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மாணவன் ஒருவனை நான்கு இளைஞர்கள் சுற்றி நின்று தாக்கும்போது, அதைத் தடுக்கவோ, பொலிசாருக்கு தகவலளிக்கவோ செய்யாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்தவர்களை பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Ottawaவில் St. Peter Catholic உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, நான்கு இளைஞர்கள் சுற்றி நின்று தாக்கியுள்ளனர்.

அவர்களில் இருவர் 18 வயதுடையவர்கள், மற்ற இருவர் 17 வயதுடையவர்கள். அந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் முகத்தில் குத்தப்பட்டதால் அந்த மாணவன் கீழே விழ, அவனை அவர்கள் நால்வரும் சுற்றி நின்று மிதிக்கின்றனர்.

தாக்குபவர்களில் ஒருவன் அந்த மாணவனின் தலையிலும் பலமாக மிதித்துள்ளான். இந்த தாக்குதலில் அந்த மாணவனுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதால் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பொலிசார் அந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த தாக்குதல் நடத்தப்படும்போது வீடியோ எடுத்தவர்கள், அதற்கு பதில் பொலிசாரை அழைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதல்களை ஆன்லைனில் வெளியிடுவதை முறையானது என நாங்கள் கருதவில்லை.

இத்தகைய சம்பவங்களை காண்பவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என Steve Boucher என்னும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers