கனடாவில் அதிகாரி மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த பெண்... பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பெண்ணை சுட்டு கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அல்பர்டாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இருந்து பொலிசாருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு ஒரு போன் வந்தது.

அதில் பேசியவர்கள், சந்தேகம் அளிக்கும்படி ஒரு நபர் உலா வருவதாக தகவல் கூறினர்.

இதையடுத்து பொலிசார் அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் அதிகாரி அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் அப்பெண் அங்கிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

இது தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரியே ஆபத்தான சூழலுக்கு தள்ளப்பட்டதால் தான் சுட வேண்டியிருந்தது.

இந்த சம்பவத்தில் அதிகாரிக்கு காவல்துறை துணை நிற்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers