முன்பின் தெரியாத ஆணுடன் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்ட பெண் பயணி.. சர்ச்சையை கிளப்பிய விமான நிறுவனம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இருந்து பிரான்ஸ் செல்லும் விமானம் தாமதம் ஆன நிலையில் அதில் பயணிக்கவிருந்த மூதாட்டியிடம் விமான நிறுவனம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத் கோபி என்ற 71 வயது புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் தான் விமான நிறுவனத்தில் செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து எலிசபெத்தின் மகள் ஜெரினி மஹிலே கூறுகையில், என் தாய் எலிசபெத் கனடாவின் ஒட்டாவாவில் இருந்து பிரான்சுக்கு பயணிக்க இருந்தார்.

அதற்கு முதலில் ஒட்டாவாவில் இருந்து மொண்றியலுக்கு விமானம் வந்து பின்னர் அங்கிருந்து பிரான்சுக்கு போகவிருந்தது.

இந்நிலையில் குறித்த ஏர் கனடா விமானம் கிளம்ப தாமதம் ஆனதால், விமான நிறுவனம் எலிசபெத்திடம் ஒரு ஹொட்டல் அறை மட்டுமே காலியாக உள்ளது, அங்கு விமானம் கிளம்பும் வரை ஓய்வெடுக்க கூறியுள்ளது.

அங்கு எலிசபெத் சென்ற நிலையில் ஹொட்டல் அறையில் ஒரு ஆண் இருந்தார்.

இருவரையும் ஒரே அறையில் தங்கும்படி விமான நிறுவனம் கேட்டு கொண்ட நிலையில் அங்கு ஒரு படுக்கை மட்டுமே இருந்தது.

யார் என்றே தெரியாத நபருடன் எப்படி சேர்ந்து தங்குவது என எலிசபெத் கோபடைந்தார்.

பின்னர் நான் விமான நிறுவனத்திடம் பேசிய பிறகு என் தாய்க்கு வேறு ஹொட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விடயத்தை சாதாரணமாக கடக்க முடியாது, உடல்நிலை சரியில்லாத பயணியிடம் இப்படி விமான நிறுவனம் நடந்து கொள்வது சரியா?

இதற்காக அந்நிறுவனம் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஏர் கனடாவின் செய்தி தொடர்பாளர், இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.

ஒரு அறையைப் பகிர்ந்து கொள்ளுமாறு பயணிகளைக் கேட்பது என்பது எங்கள் நிறுவனத்தின் கொள்கையில் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்