தாகத்திற்கு தண்ணீர் தர மறுத்த விமான ஊழியர்கள்: பயணி எப்படி சமாளித்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த ஒருவர், தாகத்திற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

ஆனால் தண்ணீர் இலவசமாக தருவதில்லை, கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி விமான ஊழியர்கள் அவருக்கு தண்ணீர் தர மறுத்துள்ளனர்.

ஆனால் கட்டணம் செலுத்தி தண்ணீர் வாங்காமலே சமாளித்தார் அந்த பயணி! ஹாமில்ட்டனிலிருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Wayne Fernandes, தாகமாக இருக்கவே பணிப்பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.

தண்ணீருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என விமான ஊழியர்கள் கூற, கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறார் Wayne.

ஆனால் தாகத்தை தணிக்க வேண்டுமே என்ன செய்வது? Wayneக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது.

விமான பணிப்பெண்ணிடம் தனக்கு ஒரு கப் ஐஸ் கட்டிகள் தருமாறு கேட்டுள்ளார் அவர் (அதற்கு கட்டணம் கிடையாது).

அந்த ஐஸ் உருகும் வரை காத்திருந்த Wayne, அந்த தண்ணீரையே குடித்து சமாளித்திருக்கிறார்.

தான் பயணம் செய்வது ஒரு குறைந்த பட்ஜெட் விமானம் என்பது தனக்கு தெரியும் என்று கூறும் Wayne, உணவு போன்ற விடயங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதுதான், அதற்காக தண்ணீர், டாய்லட் பேப்பர் போன்றவற்றிற்கும் கட்டணம் செலுத்தச் சொன்னால் எப்படி என்கிறார்.

தண்ணீர் கேட்டால் கொடுப்பது அடிப்படை மனித நாகரீகம் என்கிறார் அவர். இதற்கிடையில் கனேடிய போக்குவரத்து ஏஜன்சி, எதிர்பாராமல் விமானம் தாமதமாவது, ரத்து செய்யப்படுவது போன்ற அசாதாரண சூழ்நிலையில்தான் உணவு மற்றும் தண்ணீர் போன்ற விடயங்கள் இலவசமாக கொடுக்கப்படுமேயொழிய, சாதாரண சூழ்நிலையில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்று விளக்கமளித்துள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நீடிக்கும் பயணத்தின்போது, மக்கள் எப்படி தண்ணீர் இல்லாமல் சமாளிக்க முடியும் என்பது தனக்கு புரியவில்லை என்கிறார் Wayne.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers