கருணைக்கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண் : காதல் கணவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

Report Print Balamanuvelan in கனடா

குணப்படுத்த இயலாத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இந்திய வம்சாவளிப்பெண், தான் இறக்கும் முன் தன் காதல் கணவருக்கு அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை விட்டுச் சென்றுள்ளார்.

ஹாலிஃபாக்சில் வசித்து வந்த இந்திய வம்சாவளியினரான ஷெல்லிசர்வால், multiple system atrophy என்னும் குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டார்.

அதனால் மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரைப் பிரிய முடிவு செய்த ஷெல்லி, மூளை உட்பட தனது உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்தார்.

2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31ஆம் திகதி மருத்துவர்கள் உதவியுடன் அவர் உயிர் பிரிந்தது.

ஷெல்லியும் அவரது கணவர் ராண்டி ட்ரெசிடரும், ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த காதல் கொண்டவர்கள்.

மனைவி இறந்த மறுநாள் தனிமையில் தவித்த ராண்டி, ஷெல்லியின் அறைக்குள் உலாவும்போது, அவரது மேசையின் கீழ் ஒரு பொட்டலம் இருப்பதைக் கண்டிருகிறார்.

அது பார்ப்பதற்கு பரிசுப்பொட்டலம் போல இருக்கவே, அதை எடுத்துப் பார்த்த ராண்டிக்கு, அது தனக்காகத்தான் வைக்கப்பட்டுள்ளது என்பதும், தனது மனைவி தனக்காக வைத்துச் சென்ற சர்ப்ரைஸ் பரிசு அது என்பதும் தெரியவந்துள்ளது.

அந்த பொட்டலத்தை ராண்டி பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் ஒரு இசை குறுந்தகடு இருந்திருக்கிறது.

அதை இயக்கிப்பார்த்தபோதுதான், அது, ஷெல்லி தனக்காக தயார் செய்த பாடல் என்பதும் தெரியவர உணர்ச்சிவசப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ளார் ராண்டி.

நடந்தது என்னவென்றால், தான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, மேகன் ஸ்மித் என்னும் இசையமைப்பாளரை சந்தித்த ஷெல்லி, தனது காதல் கணவருக்காக பாடல் ஒன்றை இயற்றச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

தங்கள் வாழ்வில் நடந்த இனிமையான சம்பவங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஷெல்லி சொல்லச் சொல்ல, அவற்றையெல்லாம் எழுதிக் கொண்ட மேகன் அவற்றைத் தொகுத்து, இசையமைத்து ஒரு இனிய பாடலாக்கியுள்ளார்.

அந்த குறுந்தகட்டைத்தான் ஷெல்லி தன் காதல் கணவருக்கு நினைவுப்பரிசாக விட்டுச் சென்றுள்ளார்.

அந்த பாடலை கேட்கும்போது ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும், மறுபக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் ராண்டி.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்