கனடாவில் பெண்ணை கொன்று சடலத்தின் மீது ஏறி நின்ற கரடி.. அதிர்ந்து போன அதிகாரிகள் செய்த செயல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் அமெரிக்க பெண்ணை கரடி ஒன்று கொன்ற நிலையில், கரடியை அதிகாரிகள் சுட்டு கொன்றுள்ளனர்.

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள Red Pine தீவில் அமெரிக்காவின் Minnesota மாகாணத்தை சேர்ந்த பெண்ணான காத்திரீன் ஸ்வீட் முலீர் (62) தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாலை 6 மணியளவில் காத்தீரின் நாய் கத்தும் குரல் கேட்டதால் வீட்டை விட்டு வெளியில் வந்தார்.

அதன்பின்னர் அவர் வீடு திரும்பவேயில்லை, அந்த சமயத்தில் நாய் காயத்துடன் வீட்டுக்கு வந்த நிலையில் மகளை காணாமல் பதறிய காத்திரீன் தாய் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்குள்ள காட்டுப்பகுதியில் தேடியபோது ஒரு கருப்பு கரடி காத்திரீன் சடலடத்தின் மீது ஏறி நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கரடியை சுட்டு கொன்றனர்.

பொலிசார் கூறுகையில், எதன் காரணமாக கரடி ஆக்ரோஷமாக மாறி காத்திரீனை கொன்றது என தெரியவில்லை.

இந்த தாக்குதலை யாரும் நேரில் பார்க்கவில்லை, கொல்லப்பட்ட கரடியின் சடலம் University of Guelph ஆய்வுக்கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த காத்திரீன் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்