உலகை சுற்றி பார்க்க அதீத ஆர்வம் கொண்ட கனடிய தம்பதிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!

Report Print Raju Raju in கனடா

உலகை சுற்ற அதிக ஆர்வம் கொண்ட கனடிய தம்பதிக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் பணத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளனர்.

கனடாவின் Calgary நகரை சேர்ந்த லேரி - கிளிண்டா தம்பதி லொட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக கொண்டவர்கள்.

இந்நிலையில் நகரில் உள்ள Shoppers Drug Mart-ல் இருவரும் லொட்டரி சீட்டு வாங்கினார்கள்.

அவர்கள் வாங்கிய சீட்டுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பணத்தை வைத்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல தம்பதி திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து லேரி - கிளிண்டா கூறுகையில், பல இடங்களுக்கு பயணம் செய்வது என்றால் எங்களுக்கு அலாதி பிரியம், தற்போது லொட்டரியில் கிடைத்த பணம் மூலம் புதிய இடங்களை தேர்வு செய்து அங்கு செல்வோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்