கனடாவில் வீடு ஒன்றிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: குழந்தை உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வீடு ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குழந்தை உட்பட நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வின்னிபெக்கிலுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், கண்மூடித்தனமாக கைத்துப்பாக்கியால் சுட்டதில் அந்த வீட்டிலிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் மூவர் பெரியவர்கள், அத்துடன் ஒரு சிறு குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரின் நிலைமை முதலில் மோசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Provided by Canadian Broadcasting Corporation

தற்போது பெரியவர்கள் மூவரின் நிலைமையும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், குழந்தையின் நிலைமை குறித்து தங்களால் தற்போதைக்கு எதுவும் கூற இயலாது என பொலிசார் தெரிவித்தனர்.

குழந்தை பிழைத்துக்கொள்ளும் என்று மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எந்த தகவலையும் பொலிசார் தற்போதைக்கு வெளியிடவில்லை.

வெளியிடப்பட்ட படங்களிலும் காயமடைந்தவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச்சூடு எதனால் நிகழ்த்தப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Provided by Canadian Broadcasting Corporation
Provided by Canadian Broadcasting Corporation
Provided by Canadian Broadcasting Corporation

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்