அறுவை சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து வலியால் அவதியுற்ற பெண்: வயிற்றுக்குள்ளிருந்து மருத்துவர் எடுத்த பொருட்கள்!

Report Print Balamanuvelan in கனடா

பகுதி கருப்பை அகற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்துவந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் அவரது வயிற்றுக்குள் சில பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

Tracy-Ann Wallace (47)க்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்ததோடு, வயிற்றுக்குள்ளிருந்து அழுகிய வாடை அடிக்கும் ஒரு உணர்வு இருந்துகொண்டே இருந்தது.

அவர் பகுதி கருப்பை அகற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார். மருத்துவரிடம் கூறியபோது, காயம் ஆறும்போது அப்படி ஒரு வலி இருக்கத்தான் செய்யும் என்று கூறிவிட்டார் மருத்துவர்.

வலி அதிகரித்துக்கொண்டே செல்ல, ஒரு நாள் தனது தனது மருத்துவரின் அறைக்கு சென்ற Tracy, என்னை கவனித்தாலொழிய இங்கிருந்து நகரமாட்டேன் என்று அடம்பிடித்து அங்கேயே உட்கார்ந்துகொண்டார்.

வேறு வழியில்லாமல் Tracyயை பரிசோதித்தார் மருத்துவர். அப்போது Tracyயின் வயிற்றுக்குள் ஒரு கையுறையும் இரண்டு ஸ்பாஞ்ச் துண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவற்றை அகற்றிய மருத்துவர், Tracyயிடம் மன்னிப்புக்கோரினார். கனடாவில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அடுத்த அறுவை சிகிச்சைக்கு செல்லும் அவசரத்திலிருக்கும் மருத்துவர்கள் இவ்வாறு தவறுதலாக பொருட்களை நோயாளியின் வயிற்றுக்குள் வைத்து தைத்துவிடுகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன், அறுவை சிகிச்சை அறைக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்களை எண்ணி, அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த எண்ணிக்கையை சரிபார்க்கும் ஒரு வழக்கம் நடைமுறையில் உள்ளது என்றாலும், இந்த தவறுகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்