ஹரி மேகனுக்காக கனேடியர் செய்துள்ள தியாகம்: ஆறு மாத வருவாயை மறுத்த பெருந்தன்மை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இருக்கும் நேரத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக ஆறு மாத வருவாயை தியாகம் செய்துள்ளார் ஒரு கனேடியர்.

Capt. Miles Arsenault ஒரு பயண ஏற்பாட்டாளர். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர், வான்கூவரில் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகக் கூறி பயண ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் நேரில் வந்தபோதுதான், அவர்கள் நியூயார்க் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் என்பதும், வான்கூவரில் பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பம் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் செல்லும் திட்டத்துடன் வந்திருப்பதும், ராஜ தம்பதிக்கு தெரியாமல் ரகசியமாக அவர்களை புகைப்படம் எடுப்பது தான் அவர்களது திட்டம் என்பதும் Arsenaultக்கு தெரியவந்துள்ளது.

அவர்கள் தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தை வைத்து ஆறு மாதங்களுக்கு அவரால் சொகுசாக வாழ்க்கை நடத்தமுடியும் என்பது தெரிந்தும், அந்த பயண ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டார் Arsenault.

Arsenault

இளவரசர் குடும்பம் கனடாவுக்கு வருவதே எந்த தொல்லையுமின்றி, தனிமையில் நேரம் செலவிடுவதுதான் என்று கூறும் Arsenault, அவர்களது தனிமையை தொந்தரவு செய்ய யாரையும் அனுமதிக்க விரும்பவில்லை என்கிறார்.

கனேடியர்கள் மற்றவர்களின் தனியுரிமையை மதிப்பவர்கள் என்று கூறியுள்ள Arsenault, ராஜ தம்பதியரை பாப்பராசிகள் புகைப்படம் எடுப்பதில் கனேடியர்களுக்கு விருப்பம் இல்லை என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்