பிரித்தானியாவில் இருந்து விமானத்தில் கனடா வந்த பயணிக்கு கொரோனா உறுதி! உடன் இருந்த பயணிகளுக்கு முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

பிரித்தானியாவின் London Gatwick விமான நிலையத்தில் இருந்து கனடாவின் ரொரன்ரோவுக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விமான நிறுவனம் அது தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

westjet விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 11ஆம் திகதி குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் உட்கார்ந்திருந்த வரிசை மற்றும் அதை சுற்றியுள்ள 10 - 16 வரிசையில் உட்கார்ந்திருந்த பயணிகள் தங்களை தாங்களே தனிமைப்படுத்த அறிவுறுத்துகிறோம், இதோடு பொது சுகாதார துறையை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதலில் சிரமம் இருந்தால் உடனடியாக சுகாதார துறையினரை நாடவும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பயணிக்கு கொரோனா இருப்பதை பொது சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.

எங்கள் விமான நிறுவனம் நோயைக் கையாள்வதற்கான நிலையான நடைமுறைகளைக் கொண்டுள்ளது.

பொது சுகாதார துறை, ரொரன்ரோ பியர்சன் விமான நிலையம் மற்றும் London Gatwick விமான நிலையத்துடன் இணைந்து நாங்கள் செயல்படுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்