ஒரு செவிலியராக, பாதிக்கப்பட்டவரிடம் நான் இப்படி நடந்திருக்கமாட்டேன்: பொலிசாரால் மோசமாக நடத்தப்பட்ட மாணவி மனம் திறக்கிறார்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பெண் பொலிசார் ஒருவரால் உள்ளாடையுடன் தரதரவென இழுத்துவரப்பட்டு தலையில் மிதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவி, முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

நான் ஒரு செவிலியர், நான் இருந்ததுபோன்ற சூழலில் என்னிடம் ஒரு நோயாளி வந்திருந்தால் நான் அவரிடம் இதுபோல் நடந்துகொண்டிருக்கமாட்டேன் என்கிறார் Mona Wang (20).

Monaவின் ஆண் நண்பர், திடீரென Mona தனது குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காததால் கவலையுற்று அவருக்கு என்ன ஆயிற்று என்று கவனிப்பதற்காக பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

ஆனால் உதவவேண்டிய பொலிசாரோ, Monaவை மிருகத்தை நடத்துவதை விட மோசமாக நடத்தியுள்ளார்கள்.

Cpl. Lacy Browning என்ற அந்த பெண் பொலிசார், Monaவை கொஞ்சம் கூட மனிதாபிமானமின்றி, தரதரவென இழுத்துவந்ததோடு, Monaவின் தலையிலும் காலை வைத்து அழுத்தியுள்ளார்.

இது மாதிரியான சூழல்களில் பொலிசாரை தனியாக அனுப்பக்கூடாது என நான் நினைக்கிறேன் என்கிறார் Mona.

பொலிசாருடன் மன நலத்துறையில் பயிற்சி பெற்ற செவிலியர் ஒருவர், அல்லது சமூக ஆர்வலர் ஒருவர் செல்லவேண்டும் என கருதுகிறேன் என்கிறார் Mona.

தான் ஒரு பயிற்சி பெறும் செவிலியர் என்ற முறையில், செவிலியர்களுக்கு உடல் பலத்தை பிரயோகிக்காமலே இத்தகைய நபர்களை கட்டுப்படுத்தும் முறை கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.

எங்களிடம் இதேபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஏராளம் நோயாளிகள் வருகிறார்கள் என்று கூறும் Mona, உங்கள் உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்று அவர்களுக்கு உணர்த்துவதுதான் எங்கள் வேலை என்கிறார்.

Monaவை மோசமாக நடத்திய அந்த பெண் பொலிசார், பொலிஸ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நிர்வாக துறைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அவர் மீது பல்வேறு துறைகளின் விசாரணையும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்