கனடா பிரதமரே இதில் நீங்க தலையிடாதீங்க... கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகை குஷ்பு

Report Print Santhan in கனடா
2205Shares

பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு, கனடா பிரதமர் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சாதரணமாக பார்க்கப்பட்ட இந்த போராட்டம் இப்போது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்து, உலக அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறுகையில், விவசாயிகள் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இந்திய விவசாயிகள் குறித்து கனடா தலைவர்கள் தகவறான தகவலை தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டின் உள்விவகாரத்தில் வேறொரு நாட்டின் தலைவர் கருத்து தெரிவிப்பது தேவையற்றது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ட்ரூடோவாக இருந்தாலும், சரி யாராக இருந்தாலும் எங்கள் உள் நாட்டு பிரச்சனையில், தலையிட தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்