இப்போது நான் கோடீஸ்வரன்! கனடாவில் தந்தை ஒருவருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்... மகிழ்ச்சியுடன் விவரித்த தருணம்

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் நபர் ஒருவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Orangeville-வை சேர்ந்தவர் ஜூலி தாப்சங். இவருக்கு தான் லொட்டோ 6/49ல் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், முதலில் எனக்கு லொட்டரியில் $50,000 பரிசு விழுந்ததாகவே நினைத்தேன்.

பின்னர் தான் $1 மில்லியன் பரிசு விழுந்ததாக தெரியவந்தது.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என் வாழ்கை மாறவுள்ளது, இப்போது நான் கோடீஸ்வரன்.

பரிசு பணத்தை வைத்து முதலில் என் அடமான கடன்களை அடைக்கவுள்ளேன்.

மீதி பணத்தை என் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதுடன் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்