கிழக்கில் பிரசித்தி பெற்ற சின்னக்கதிர்காமம் என சிறப்பித்து கூறப்படும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த மகோற்சவ விழா தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், 19.9.2019 அன்று தீர்த்தோற்சவத்துடன், தீ மிதிப்பு வைபவமும் , புனித வெருகல் கங்கையில் தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளது.
உற்சவத்தின் கிரிகைகள் யாவும் மகோற்சவ பிரதம குரு கிரிஹா திலகம் பிரம்மஸ்ரீ அ.செல்வராஜக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.