வெற்றியாளர்களை அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் ஆப்பிள் சேலஞ்ச் எனும் போட்டியினை அறிமுகம் செய்திருந்தது.

iPhone 7, iPhone 8, iPhone X மற்றும் iPhone XS ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வைத்திருக்கும் பயனர்கள் அவற்றின் ஊடாக எடுக்கப்படும் புகைப்படங்களை ஆப்பிள் சேலஞ்ச் பேஸ்புக் பக்கம், டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பகிர முடியும்.

இவ்வாறு படங்களை பகிர்பவர்களுள் சிறந்த புகைப்படத்தை பதிவு செய்பவர்களை தெரிந்தெடுக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது.

ஏறத்தாழ ஒரு மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெற்றியாளர்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி Alex Jiang, Black Marvin, Darren Soh, Nikita Yarosh, Dina Alfasi, Elizabeth Scarrott, Andrew Griswold, Bernard Anolin, LieAdi மற்றும் Robert Glaser என்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் Singapore, Germany, Belarus, Israel மற்றும் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

மேலும் இவர்களின் புகைப்படங்கள் ஆப்பிள் ஸ்டோரில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers