மடிக்கக்கூடிய கைப்பேசி தயாரிப்பில் காலடி பதிக்கும் சோனி நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகத்தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதன வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமாக சோனி விளங்குகின்றது.

இந்நிறுவனம் தற்போது மடிக்கக்கூடிய (Foldable) ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சாம்சுங் மற்றும் ஹுவாவி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய கைப்பேசியினை வடிவமைத்துள்ளன.

இதற்கு அடுத்ததாக இவ் வகைக் கைப்பேசியினை ஆப்பிள் நிறுவனமும் வடிவமைக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது சோனி நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5G தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய இக் கைப்பேசியானது 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் ஸ்மார்ட் கைப்பேசி உலகில் இது ஒரு புரட்சியாக பார்க்கப்படுவதுடன் ஏனைய முன்னணி நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்