கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவியினை வியாபார கறுப்பு பட்டியலில் சேர்த்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து பல்வேறு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் ஹுவாவியுடனான வர்த்தக உறவை துண்டித்திருந்தன.
இந்நிலையில் தற்போது சற்று ஆறுதலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாவி நிறுவனத்திற்கு தேவையான உபகரணங்களை விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஹுவாவி நிறுவனம் தொடர்ந்தும் வியாபார கறுப்பு பட்டியலிலேயே இருக்கும்.
இதனால் ஹுவாவி நிறுவனம் தனது உற்பத்திகளையோ அல்லது உபகரணங்களையோ அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது.