பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த அதிரடி: வீட்டிற்கே சென்று ஸ்மார்ட் கைப்பேசிகளை திருத்தி கொடுக்கவுள்ளது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பிரம்மாண்டமான மின் வணிக நிறுவனமாக திகழும் பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு அதிரடி சேவையினை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி தனது தளத்தில் கொள்வனவு செய்யும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஏற்படக்கூடிய பழுதுகளை வீட்டிற்கே சென்று சரிபார்த்து கொடுக்கவுள்ளது.

இச் சேவையினை 99 இந்திய ரூபாய்களில் இருந்து வழங்கவுள்ளது.

இந்த திட்டத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கவர்களில் உடைவுகள் ஏற்படுதல், திரவங்களினல் பழுதடைதல், வன்பொருள் மற்றும் மென்பொருள் பழுதுகள் என்பன சரி செய்து கொடுக்கப்படவுள்ளது.

Xiaomi, POCO, Realme, Oppo, Samsung, Apple, Honor, Asus, Infinix உட்பட மேலும் பல ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு இச் சேவை வழங்கப்படவுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers