மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக் 22வது வருட பரிசளிப்பு விழா

Report Print Akaran Akaran in கிரிக்கெட்

மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக் அமைப்பின் ZEN PLUS Financial அனுசரணை செய்யப்பட்ட 22வது வருட பரிசளிப்பு விழா கடந்த நவம்பர் 12ம் திகதி சனிக்கிழமை, 2016 மாலை 6 மணியளவில் குயின் பலஸ்(Queen Palace Banquet Hall) மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது(22ND MTCL Awards Gala 2016).

இப்பரிசளிப்பு விழா குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, ஆரம்ப நிகழ்வாக கனடா தேசியகீதமும் தமிழ்த்தாய்வாழ்த்தும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈழப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், அக்காலகட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. . அடுத்த அம்சங்களாக வரவேற்பு நடனமும், மங்களதீபம் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றன. அடுத்து வருகை தந்த அனைவரையும் வரவேற்கும் முகமாக வரவேற்புரை MTCL அமைப்பின் தலைவர் டியுடன் பெர்னாண்டோவினால்(Duton Fernando) வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டமை மேலும் சிறப்பம்சமாகும். குறிப்பாக Lankasri CEO சுரேஷ் சிறி(Suresh Sri), Nava Law Professional Corporation Principal Lawyer குபேஷ் நவா(Kubes Navaratnam), பரிசளிப்பு விழா அனுசரணையாளர் ZENPLUS FINANCIAL Insurance Advisor ஜெலன் ஆறுமுகநாதன்(Jelan Arumuganathan), லோகன் கணபதி(City of Markham Councillor), Doto Studio CEO செந்து வேல்நாயகம்(Senthu Velnayagam) JAAL AWARDS உரிமையாளர் ஜெய்(Jey) மற்றும் Mega Financial ஜெய்

நடராஜா(Jay Nadarajah), விஜய் சேனாதிராஜா(Youth Coordinator Cricket Canada), ரஞ்சித் சனி(President Cricket Canada), ஆகியோருடன் மேலும் பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். டொரண்டோ மேயர் ஜோன் டோரி(John Tory) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) ஆகியோரின் வாழ்த்துச்செய்திகளும் நிகழ்வை மேலும் சிறப்படையச்செய்தன. நிகழ்வின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பலதரப்பட்ட போட்டிநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இவ்வருடம் மிகவும் சிறந்த முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், மிகச்சிறந்த ஐந்து அணிகளுக்கும் சிறப்புப்பரிசில்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில் ஐந்தாவது இடத்தை GPS துடுப்பாட்ட கழகமும், நான்காவது இடத்தை ATLAS-A துடுப்பாட்ட கழகமும், மூன்றாம் இடத்தை B-TOWN BOYZ துடுப்பாட்ட கழகமும், இரண்டாம் இடத்தை YOUNGSTARS துடுப்பாட்ட கழகமும், முதலாம் இடத்தை COUGARS துடுப்பாட்ட கழகமும் தட்டிச்சென்றன. இவ்வருட பரிசளிப்பு விழாவின் அதிக பரிசில்களை COUGARS

துடுப்பாட்ட கழகமும், YOUNGSTARS துடுப்பாட்ட கழகமும் தட்டிச்சென்றமை அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். மேலும் COUGARS துடுப்பாட்ட கழகம் தொடர்ந்து இரண்டாவது வருடமும் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் SUPER LEAGUE CHALLENGE TROPHYஐ கைப்பற்றியமை மிகச்சிறந்த சாதனையாகும்.

மேலும் இவ்வருடத்தின் சிறந்த களத்தடுப்பாளராக SAUGABOYS அணியை சேர்ந்த கலேஸ்வரன் மகேஸ்வரன்(kaleswaran Maheswaran)ம், சிறந்த விக்கெட் காப்பாளராக YOUNGSTARS அணியை சேர்ந்த சிவசிரோன் சதானந்தலிங்கம்(Sivasiron Sathananthalingam)ம், சிறந்த அறிமுக வீரராக INUVIL BOYS TORONTO அணியை சேர்ந்த சிந்துஜன் சின்னராசா(Sinthujan Sinnarasa)ம், சிறந்த வளர்ச்சியடைந்த வீரராக BNS அணியை சேர்ந்த தினேஷ் குகன்(Dinesh Kugan)ம், சிறந்த முகாமையாளராக GPS அணியை சேர்ந்த ஜெகன் நடராசா(Jegan Nadarajah)ம், சிறந்த அணித்தலைவராக WARRIORS அணியை சேர்ந்த சஞ்சய் மாயாண்டி(Sanjey Mayandi)ம், சிறந்த

ஓட்டஎண்ணிக்கை பதிவாளராக COUGARS அணியை சேர்ந்த அபிராஜ் கனகரத்தினம்(Abiraj Kanagaratnam)ம் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் நடுநிலையுடன் சிறந்த முறையில் நடுவர் பனி புரிந்த வீரர்களுக்கும் சிறப்புப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் இவ்வருடத்தின் Hall of Fame inductee ஆக ஸ்ரீகாந்த் நடராஜா(Srikanth Nadarajah) தெரிவுசெய்யப்பட்டு மேடையில் அனைவரின் கரகோசத்தின் மத்தியில் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளராக COUGARS அணியை சேர்ந்த கிருபா தம்பிரத்னம்(Kirupa Thambiratnam)ம், சிறந்த துடுப்பாட்டவீரராக B-TOWN BOYZ அணியை சேர்ந்த அன்றிவ் ஜோர்ஜ்(Andrew George)ம், சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக COUGARS அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah)ம் தெரிவுசெய்யப்பட்டனர். இவருடத்தின் அதியுயர் தனிநபர் விருதான MOST VALUABLE PLAYER(MVP) விருதினை YOUNGSTARS அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) பெற்றுக்கொண்டமை மிகவும் பெருமைப்படவேண்டிய விடயமாகும். இவ்வருட MTCL பரிசளிப்பு விழா நூலினையும் அவர் வெளியிட்டமை மேலும் சிறப்பம்சமாகும். இந்நிகழ்வானது Unknown Generation Media நிறுவனத்தினால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கவேண்டிய விடயமாகும்

மேலும் ஊடக அமைப்புக்களான நினைவுகள்(Ninaivukal), TET, CMR , மற்றும் Tamil Birds Studio ஆகியோரும் வருகை தந்து மிகஅருமையான விதத்தில் படங்கள், வீடியோக்கள் எடுத்து தமது இணையவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பதிவேற்றி உலகிலுள்ள அனைத்து ரசிகர்களும் பார்த்துமகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தை ஏற்படுத்திதந்தனர். வருகைதந்திருந்த அனைவருக்கும் அறுசுவை நிறைந்த இராப்போசனமும் வழங்கப்பட்டது.

அடுத்ததாக MTCL அமைப்பிற்கு உதவிபுரிந்த அனைத்து நலன்விரும்பிகளுக்கும், அமைப்பின் 2016ம் ஆண்டு உறுப்பினர்களுக்கும், மற்றும் அனுசரணையாளர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் வருகை தந்த அனைவரையும் படம் எடுத்து உடனே நிழற்படமாக(PRINT) மாற்றி வழங்கப்பட்டது. இறுதிநிகழ்வுகளாக நன்றியுரை MTCL அமைப்பின் செயலாளரான ஜெயகரன் ஜெயகுமாரினால்(Jeyaharan Jeyakumar) வழங்கப்பட்டத்தோடு, நடனநிகழ்வுடன் நிகழ்ச்சி நிறைவேறியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments