பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
62Shares
62Shares
ibctamil.com

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மெல்போர்ன் அணி, 20 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆனது.

அந்த அணியில் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 50 ரன்கள் (39 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். இதுதவிர கெவின் பீட்டர்சன் 30 ரன்களும், ஜேம்ஸ் பாக்னர் 20 ரன்களும் எடுத்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் 3 விக்கெட்களும், பென் கட்டிங், மார்க் ஸ்டெகீட், யாசிர் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

மெக்கல்லம் 30 பந்துகளில் 61 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து லியாம் பவ்வே பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோ பர்ன்ஸ் களமிறங்கினார். பிரிஸ்பேன் அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. கிறிஸ் லின் 63 ரன்களுடனும், ஜோ பர்ன்ஸ் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்றைய போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்கள் வீழ்த்திய பிரிஸ்பேன் அணியின் மிட்செல் ஸ்வெப்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இன்று நடைபெறும் லீக் போட்டிகளில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்