இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஓபனிங் யார் இறங்க வேண்டும்? கங்குலி சொன்ன தமிழக வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் இறங்க வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகள் மோதும்,5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி, துவக்க வீரரான ஷிகார் தவான் நல்ல ஒருநாள் போட்டி வீரர். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவில் நடந்த பெரும்பாலான ஆட்டங்களில் நன்றாக விளையாடியுள்ளார்.

ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட்களில் அவர் சரியாக விளையாடவில்லை.

இதனால், முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். நான் தலைவராக இருந்தால், இதைத் தான் செய்வேன் என்று கங்குலி கூறியுள்ளார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers