தென் ஆப்பிரிக்கா வீரர் ஜாண்டி ரோட்சை மிஞ்சிய இளம் வீரர்: அபராமாக கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சிடி ராபியில் இளம் வீரர் அன்மோல்பிரீத் சிங் பிடித்த கேட்ச் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மொத்தம் 100 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரான ரஞ்சிடிராபி தொடர் கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் திகதி துவங்கியது. இந்த தொடர் பிப்ரவரி 6-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் பஞ்சாப் மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையேயான போட்டி விசாகப்பட்டிணம் ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.

பஞ்சாப் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டு, மந்தீப் சிங் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆந்திரா பேட்ஸ்மேன் ஸ்ரீகர் பரத் கொடுத்த கேட்சை, பஞ்சாப் அணி வீரர் அன்மோல்பிரீத் பறந்து சென்று மிகவும் நேர்த்தியாக கேட்ச் பிடித்தார்.

அன்மோல்பிரீத் சிங் பிடித்த கேட்சைப் பார்த்து பஞ்சாப் வீரர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

பஞ்சாப் கேப்டன் மந்தீப் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்மோல்பிரீத் சிங் கேட்ச் வீடியோ போட்டு இதுவரை இதுபோன்ற கேட்ச் பார்த்ததில்லை என பாராட்டி உள்ளார்.

மேலும் இந்த வீடியோவைக் கண்ட சிலர் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்சையே மிஞ்சிவிட்டார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers