எல்லாரும் புஜாராவாக முடியாது! அவுஸ்திரேலியா வீரரை சீண்டி டோனியாக மாறிய ரிசப் பாண்ட் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிசப் பாண்ட எல்லோரும் புஜாராவாகிட முடியாது என்று கவாஜா கேட்ச் கொடுத்ததும் பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களுக்குள் சுருட்டிய அவுஸ்திரேலியாவை, இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி வருகிறது.

இப்போட்டியில் 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். 125 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் சேர்த்தார்.

முதல் ஓவரிலேயே களம் இறங்கிய அவர், 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து Glove-வில் உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது.

ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.

அப்போது கவாஜா கேட்ச் கொடுத்தவுடன் எல்லோரும் புஜாராவாகிவிட முடியாது என்று ரிஷப் பாண்ட ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

அதுமட்டுமின்றி டோனி கீப்பிங் செய்தால், ஸ்டம்பிற்கு பின்னால் நின்று கொண்டு பந்துவீச்சாளர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார்.

அதே போன்று ரிசப் பாண்ட் அவுஸ்திரேலியா வீரர் ட்ர்வீஸ் ஹெட் களத்தில் இருந்த போது, ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று கொண்டு, பந்துவீச்சாளர்களிடம் டர்வீஸ் ஹெட் ஷார்ட் பந்துகளுக்காக காத்துள்ளார், அவருக்கு ஷார்ட் பந்துகள் வீசாதீர்கள் என்று தொடர்ந்து கூறி கொண்டே இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers