ஒரே ஒரு ரன் அவுட்...எப்போதும் பார்க்காத டோனியை பார்த்த ரசிகர்கள்! மகிழ்ச்சி துள்ளி குதித்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டோனி ரன் அவுட் செய்தவுடன், எப்போதும் இல்லாத அளவிற்கு கொண்டாடியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், டோனி நியூசிலாந்து வீரர் ஜெம்ஸ் நிச்சம்மை ரன் அவுட் செய்த வீடியோ தான், இந்திய வெற்றியை விட அதிகமாக பேசப்பட்டது.

ஏனெனில் இந்திய அணி நிர்ணயித்த 252 ஓட்டங்களை நியூசிலாந்து அணி விரட்டிய போது இடையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

ஆனால் தனி ஒருவனாக ஜேம்ஸ் நிச்சம் மட்டும் இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடிக் கொண்டிருந்தார்.

இதனால் இவரை வீழ்த்துவது இந்திய அணிக்கு பெரும் தொல்லையாக இருந்தது. அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு தேவையான ரன் விகிதமும் அவர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது 6 ஓட்டத்திற்கும் கீழே இருந்தது.

இதன் காரணமாக அவரை வீழ்த்துவதற்கு அணியின் தலைவர் ரோகித்சர்மா பந்து வீச்சாளர்களை தொடர்ந்து மாற்றி வந்தார்.

ஆனால் அதற்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து அணியின் 36-வது ஓவரை கீதர் ஜாதவ் வீசினார். அப்போது நிச்சிம் எதிர்கொண்டார்.

ஆனால் பந்தானது அவரது கால்காப்பில் பட்டதால், எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது. ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது.

பந்து பின்னால் டோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நிச்சிம் ம் கிரீசுக்கு வெளியே இருந்தார். டோனி அமைதியாக 2 அடி வந்து, எல்.பி.டபில்யூ அப்பீல் செய்தார்.

ஆனாலும் நீஷம் வெளியில் இருந்த வாய்ப்பை மிகச்சாமர்த்தியமாகக் கையாண்ட டோனி பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் ஸ்டம்பை நோக்கி எறிந்தார், பந்து ஸ்டம்பில் பட நீஷம் ரன் அவுட் ஆனார்.

எப்போதும் விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடாத டோனி இந்த விக்கெட்டை பெரிதாக கொண்டாடினார். டோனி இம்மாதிரி ஒரு விக்கெட்டை கொண்டாடி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பேட்டிங்கில் சொதப்பினாலும், இப்படி ஒரு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு டோனி பெரிதும் உதவினார்.

இப்போட்டியில் டோனி வெறும் 1 ஓட்டம் மட்டுமே எடுத்து பெளலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்