உலக கோப்பையில் டோனிக்கு இருக்கும் பங்கு - யுவராஜ் சிங் கருத்து

Report Print Abisha in கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனிக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று யுவராஜ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

உலககோப்பை தொடரில் முன்னாள் கேப்படன் டோனி இடம்பெறுவது குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது, டோனிக்கு கிரிக்கெட் குறித்து சிறந்த அறிவு இருக்கிறது. விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடிய திறன் கொண்டவர் அவர். அந்த பணியை அவர் பல வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலம், அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். இளம்வீரர்களை மட்டுமல்லாமல் கேப்டன் விராட்கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார். இதனால் முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே டோனி உலக கோப்பை அணியில் முக்கிய இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கிய இடமாக இருக்கும். அவர் எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers