உலகக் கிண்ண தொடருக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேவை! முன்னாள் இந்திய வீரர்கள் ஆதரவு

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கவாஸ்கர் உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை என தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண தொடருக்கு முன்பாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் 24ஆம் திகதி முதல் தொடங்குகிறது.

ஆனால், இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் நிலையாக விளையாடி வரும் அவர், தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான கவாஸ்கர், உலகக் கிண்ண தொடருக்கான அணியில் தினேஷ் கார்த்திக் தேவை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், ரகானே, ரிஷப் பண்ட் என யாரையும் களம் இறக்க தேவையில்லை. தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கலாம்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. என்னுடைய கணிப்பில் 13 வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.

அதில் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு.

மற்ற வகையில் ராகுல், ரகானே, ரிஷப் பண்ட் ஆகியோரை காட்டிலும் உலகக் கிண்ண தொடருக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அணியில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும்.

தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றி களம் இறக்கும்போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய அனுபவம் இருப்பதால் அவரால் ஒருநாள் போட்டியில் ஜொலிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் மற்றொரு முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுகையில், ‘இந்திய அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை 20 ஓவர் வீரராக மட்டுமே பார்க்க தொடங்கி விட்டது என்பது புரிந்துவிட்டது. அவருக்கு உலகக் கிண்ணத்தை இந்திய அணியில் இடம் கிடைப்பதும், வாய்ப்புக்கான கதவுகள் திறப்பதும் என்னை பொறுத்தவரை இல்லை.

அதற்காக அவரின் ரசிகர்களிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன். நீண்ட நேரம் விளையாடும் போட்டியில், தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடும் பொறுமையில்லை என்று கருதுகிறார்கள்.

டோனி, ரிஷப் பண்ட் ஆகியோருடன் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக், டோனியை காட்டிலும் கீப்பிங்கில் சற்று குறைவாகவும், ரிஷப் பண்ட்-ஐ காட்டிலும் சற்று சிறப்பாகவும் செயல்படுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்