ரிஷாப் பண்ட் மற்றும் ராயுடுவை உலகக் கோப்பை அணியில் தெரிவு செய்யாதது ஏன்? தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், ரிஷாப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடுவை தெரிவு செய்யாதது ஏன் என தேர்வுக்குழுத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30ஆம் திகதி உலகக் கோப்பை ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் உட்பட ஹர்த்திக் பாண்ட்யா, கேதார் ஜாதவ், கே.எல்.ராகுல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஆனால், இளம் அதிரடி வீரரான ரிஷாப் பண்ட் மற்றும் துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு இருவரும் தெரிவு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

AP

அவர் கூறுகையில், ‘தினேஷ் கார்த்திக்கின் விக்கெட் கீப்பிங் திறமையும் அவரைத் தெரிவு செய்ததற்கு காரணம். டோனிக்கு மாற்று வீரராகவே தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சில சர்வதேச ஆட்டங்களில் கடைசிக் கட்டங்களில் அவர் அதிரடியாக விளையாடியதைப் பார்த்தோம்.

அதனால் தான் தினேஷ் கார்த்திக்கைத் தெரிவு செய்துள்ளோம். சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு 4ஆம் நிலை வீரருக்குப் பல வீரர்களைத் தெரிவு செய்தோம். தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ராயுடுக்கு நிறைய வாய்ப்புகள் அளித்தோம்.

ஆனால் விஜய் ஷங்கர் மூன்று வகை திறமைகள் கொண்டவராக உள்ளார். அவரால் பேட்டிங் செய்ய முடியும். நல்ல சூழல் அமைந்தால் அவரால் சில ஓவர்கள் வீசமுடியும். மேலும் அவர் நல்ல ஃபீல்டரும் கூட. விஜய் ஷங்கரை 4ஆம் நிலை வீரராகப் பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers