வார்னர் விளாசிய பந்து.. தலையில் தாக்கி நிலைகுலைந்த பந்துவீச்சாளர்: பயிற்சியில் விபரீதம்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட பயிற்சியின் போது, அதிரடி வீரர் டேவிட் வார்னர் அடித்து பந்து பந்துவீச்சாளர் தலையில் தாக்கி அவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை யூன் 9ம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இதற்காக இன்று அவுஸ்திரேலியா வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது அவுஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்து, வலை பந்தவீச்சாளர் தலையில் தாக்கி நிலைகுலைந்து மைதானத்தில் விழுந்துள்ளார். இதானல், பயிற்சி தடைப்பட்டுள்ளது.

உடனே அவரை மீட்ட வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது, பாதிக்கப்பட்ட வலை பந்து வீச்சாளர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் இந்தியாவை பூர்விகமாக கொண்ட பிரித்தானியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜெய் கிசான் என தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சைக்கு பின்னர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தினால் வார்னர் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவுஸ்திரேலிய அணி த்தலைவர் பின்ச் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்