வங்கதேசத்துக்கு எதிராக இதை செய்யுங்கள்.. இலங்கைக்கு ஜம்பவான் ஜெயசூர்ய அளித்த ஆலோசனை

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பையில் இன்று நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இலங்கை ஜம்பவான் சனத் ஜெயசூரிய தனது அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசை பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் வங்கதேச அணி, 9வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியுடன் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றிப்பெற்றது. பாகிஸ்தான் உடனான மூன்றாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதுவரை மூன்று லீக் போட்டியில் விளையாடிவுள்ள வங்கதேச அணி, தென் ஆப்பரிக்கா உடனான முதல் போட்டியில் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி தனது நான்காவது உலகக் கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணியுடன் மோதவுள்ள நிலையில் இலங்கை ஜம்பவான் சனத் ஜெயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, இலங்கை அணி தனது அடிப்படைகளை சரியாக பெற்று, வங்கதேச அணி மீது அழுத்தம் கொடுப்பதோடு, இந்த வாய்ப்பை கைப்பற்ற வேண்டும். Good Luck! வெற்றிப்பெற விளையாடுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers